புதுக்கோட்டை: கீரனூர் கூட்டுறவு வங்கி யில் ரூ.1.08 கோடி நகைக் கடன் முறைகேட்டில் ஈடுபட் டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வங்கியின் செயலாளர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அதன் அடிப் படையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிலும் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், நகைகளை அடகு வைக்காமலேயே அடகு வைத்ததாக கணக்கு காட்டி, ரூ.1.08 கோடி மோசடி நடை பெற்றிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வங்கிச் செயலாளர் பி.நீலகண்டன், மேற்பார்வையாளர் என்.சக்தி வேல், நகை மதிப்பீட்டாளர் என்.கனகவேலு ஆகியோரி டம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி விசாரணை நடத்தினார். பின்னர், அந்த தொகையை 3 பேரிடம் இருந்தும் வசூலிக்கும் பணியும் நடைபெற்றது.
அதன் பின்பு, மோசடியில் ஈடுபட்ட நீலகண்டன், என்.சக்திவேல் ஆகியோர் டிச.11-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், நகை மதிப்பீட்டாளர் என்.கனகவேலு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வங்கியின் செயலாளர் பி.நீலகண்டன், கீரனூர் சிவன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த கீர னூர் போலீஸார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
பணியிடை நீக்கம் செய்யப் பட்ட பிறகு நீலகண்டன் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், வங்கி நிர்வாகத்துக்கு தொடர்புடைய அனைவரையும் விசாரித்தி ருக்க வேண்டும் என அவர் கூறி வந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.