க்ரைம்

தஞ்சையில் பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாய் கைது

செய்திப்பிரிவு

தஞ்சையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாய் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் கொலை செய்த கொடூரம் நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், போலீஸார் நடத்திய விசாரணையில் குழந்தையின் தாய் தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த பிரியதர்ஷினி என தெரியவந்தது.

இதனையடுத்து தாய் பிரியதர்ஷியை போலீஸார் கைது செய்தனர். முறையற்ற உறவில் பிறந்ததால் குழந்தையை கொன்றதாக தாய் பிரியதர்ஷினி போலீஸாரிடம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT