விருதுநகர் அருகே இன்ஸ்பெக்டக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இன்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.1.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் கருப்பசாமி. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனாம் வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்தன.
அதையடுத்து, வச்சக்காரப்பட்டி காந்தி நகர் அருகே உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இன்று சோதனை நடத்தினர்.
துணை அதிகாரி (ஆய்வுப் பிரிவு) லோகநாதன், டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், பாரதிபிரியா மற்றும் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.1.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.