க்ரைம்

தஞ்சை அருகே காவல் நிலையத்தில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை: காவலர் கைது

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் அம்மன் பேட்டையைச் சேர்ந்த முருகானந்தம் (29). இந்த காவல் நிலையத்துக்கு, கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஆயுதப் படைப் பிரிவில் இருந்து ஒரு பெண் காவலர் பணிக்கு வந்துள்ளார். இரவில் காவல் நிலையத்தின் ஓய்வு அறையில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் காவலரிடம், முருகானந்தம் கடந்த 13-ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்துப் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில், அய்யம்பேட்டை போலீஸார் 14-ம் தேதி முருகானந்தத்தைக் கைது செய்தனர்.

தொடர்ந்து தஞ்சாவூர் 3-ம் எண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT