க்ரைம்

மதுரை அவனியாபுரத்தில் கஞ்சாவை டோர் டெலிவரி முறையில் விற்பனை செய்துவந்த இருவர் கைது

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் இளைஞர்களுக்கு டோர்டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து அவனியபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவனியாபுரம் செம்பூரணி ரோடு பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் இருவர் வேகமாக செல்லவே அவர்களை மடக்கிப் பிடித்து போலீஸார் சோதனை செய்ததில் அவரிடம் 1 கிலோ 500 கிராம் கஞ்சா இருக்கவே அவர்களைக் கைது செய்து விசாரித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வில்லாபுரம் பத்மா தியேட்டர் காலனி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகவேல் என்பவரின் மகன் வண்டு சரவணன் மற்றும் முனியசாமி என்பவரின் மகன் லெப்ட் சரவணன் என்பது தெரியவந்தது.

இதில் வண்டு சரவணன் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதை தொடர்ந்து இருவரிடமும் கஞ்சாவை பறிமுதல் செய்தும், இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT