மிலிரன்

 
க்ரைம்

வண்டலூர் மேம்பாலத்தில் விபத்து: 6 வயது சிறுவன் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

வண்டலூர்: மொபெட் மீது வேன் மோதிய விபத்​தில், தந்​தையின் கண் எதிரே 6 வயது மகன் உயி​ரிழந்​தார். வண்​டலூரைச் சேர்ந்தவர் சரவணன் (43).

உணவு விநியோகம் செய்​யும் வேலை செய்து வரு​கிறார். இவர் தனது மகள் டிசானா (12), மகன் மிலிரன் (6) ஆகியோரை மொபெட்​டில் அழைத்​துக்​கொண்டு வண்​டலூரில் உள்ள தனியார் பள்​ளிக்கு நேற்று காலை சென்று கொண்​டிருந்​தார்.

வண்டலூர் மேம்​பாலத்​தில் எதிர்​திசையில் சென்​றுகொண்​டிருந்​த​போது, தாம்​பரத்​தி​லிருந்து படப்பை நோக்​கிச் சென்ற வேன், மொபெட் மீது பயங்​கர​மாக மோதி​யது.

இதில் தூக்கி வீசப்​பட்ட சிறு​வன் மிலிரன் பலத்த காயமடைந்து, தந்​தையின் கண் எதி​ரிலேயே சம்​பவ இடத்​தில் உயி​ரிழந்​தார். சரவணன், அவரது மகள் டிசானா ஆகியோர் காயமடைந்​தனர்.

இதற்​கிடையே வேன் மோதி​யதில் மற்​றொரு மொபெட்​டில் வந்த முகமது ஷாகித் (28) என்​பவரும் காயமடைந்​தார். பொது​மக்​கள் காயமடைந்த 3 பேரை​யும் மீட்டு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

தாம்​பரம் போக்​கு​வரத்து புலனாய்​வுப் பிரிவு போலீ​ஸார், சிறு​வனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக தாம்​பரம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். விபத்தை ஏற்​படுத்​திய வேன் ஓட்​டுநர் மணிகண்​டன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT