க்ரைம்

தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை

செய்திப்பிரிவு

கோவை: தனி​யார் நிறுவன ஊழியரை அடித்​துக் கொன்ற 6 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து கோவை நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. கோவை மாவட்​டம் பொள்​ளாச்சி அருகே உள்ள வடு​க​பாளை​யத்​தைச் சேர்ந்​தவர் ஆனந்த்​(45).

இவர் சிங்​காநல்​லூரில் உள்ள மெத்தை தயாரிப்பு நிறு​வனத்​தில் மேற்​பார்​வை​யாள​ராகப் பணி​யாற்றி வந்​தார். 2018 நவம்​பர் 5-ம் தேதி ஏடிஎஸ்சி சாலை​யில் உள்ள மது​பானக் கூடத்​துக்கு ஆனந்த் மது அருந்​தச் சென்​றார்.

          

அப்​போது ஆனந்​துக்​கும், அருகே மது அருந்​திக் கொண்​டிருந்த சதீஷ்கு​மார் என்​பவருக்​கும் தகராறு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் ஆத்​திரமடைந்த சதீஷ்கு​மார், தன் நண்​பர்​கள் வின்​சென்ட், சிவ​மூர்த்​தி, ஜெயக்​கு​மார், விவின் தாஸ், கார்த்​திக் மற்​றும் ஒரு சிறு​வன் ஆகியோ​ருடன் சேர்ந்து ஆனந்தை சுற்றி வளைத்து சரமாரி​யாக தாக்​கினார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

சிறு​வன் மீதான வி​சா​ரணை

இது தொடர்​பாக பொள்​ளாச்சி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து 7 பேரை​யும் கைது செய்​தனர். இந்த வழக்கு கோவை 5-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது.

வழக்கை விசா​ரித்த நீதிபதி சிவக்​கு​மார், குற்​றம் சாட்​டப்​பட்ட சதீஷ்கு​மார், வின்​சென்ட், சிவ​மூர்த்​தி, ஜெயக்​கு​மார், விவின் தாஸ், கார்த்​திக் ஆகியோ​ருக்கு ஆயுள் சிறை தண்​டனை, ரூ.5 ஆயிரம் அபராத​மும் விதித்து உத்​தர​விட்​டார். சிறு​வன் மீதான வி​சா​ரணை, சிறு​வர்​களுக்​கான நீதி​மன்​றத்​தில்​ தனி​யாக நடை​பெற்​று வருகிறது.

SCROLL FOR NEXT