சென்னை: அடையாறு பகுதியில் மின் திருட்டில் ஈடுபட்ட நுகர்வோருக்கு ரூ.5.98 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 29-ம் தேதி மின்வாரியத்தின் சென்னை அமலாக்க கோட்டத்துக்கு உட்பட்ட அதிகாரிகள், அடையாறு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு உயர் மதிப்புள்ள மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சத்து 98,004 மின் நுகர்வோருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையைத் தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.32 ஆயிரம் செலுத்தியதால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.