க்ரைம்

பெருங்களத்தூர் | வியாபாரியை வெட்டிவிட்டு 46 கிலோ வெள்ளி கொள்ளை: 6 பேர் கைது

செய்திப்பிரிவு

பெருங்களத்தூர்: தாம்​பரம் அருகே பெருங்களத்​தூர் பேருந்து நிலை​யத்தில், 46 கிலோ வெள்​ளிப்பொருட்​களைக் கொள்​ளை​யடித்த வழக்​கில் 6 பேரை போலீ​ஸார் கைது செய்து, கொள்​ளை​யடிக்​கப்​பட்ட வெள்​ளிப் பொருட்​கள், 3 வாக​னங்​களைப் பறி​முதல் செய்​தனர்.

திருச்​சி​யி​லிருந்து சுமார் 46 கிலோ வெள்​ளிப் பொருட்களைக் கொண்டு வந்த முகமது ஹுசைன் என்​பவர், கடந்த 8-ம் தேதி இரவு 7.30 மணி​யளவில் பெருங்​களத் தூர் பேருந்து நிலை​யத்​தில்நின்று கொண்​டிருந்​தார்.

அப்​போது அங்கு வந்த சிலர், அவரது தலை​யின் பின்​பகுதி​யில் வெட்​டி​விட்டு, அவரிட​மிருந்த வெள்ளிப் பொருட்​களைக் கொள்​ளை​யடித்​துச் சென்​றனர்.

பரங்கிப்பேட்டையில் கைது

இது​குறித்து பீர்க்​கன்​காரணை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து தனிப்​படை அமைத்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இதில் கிடைத்த தகவல்​கள், தடயங்களின் அடிப்படை​யில் தனிப்​படை போலீ​ஸார் கடலூர் மாவட்​டம் பரங்​கிப்​பேட்டை பகுதி​யில் நேற்று அதி​காலை சோதனை நடத்தி சமீர் (34), ரிஸ்​வான் (27), இஸ்மாயில் (30), சாதிக் பாஷா(31), மன்ஷா (25), லாரன்ஸ் (28) ஆகிய 6 பேரைக் கைது செய்​தனர்.

தலைமறைவான 2 பேருக்கு வலை

அவர்​களிட​மிருந்து கொள்​ளை​யடிக்​கப்​பட்ட சுமார் 46 கிலோ வெள்​ளிப் பொருட்​கள், 2 கார்​கள், ஸ்​கூட்​டர், கொள்​ளைக்​குப் பயன்​படுத்​தப்​பட்ட கத்​தி​கள் ஆகிய​வற்​றைப் போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.

மேலும், இவ்​வழக்​கில் தொடர்​புடைய​தாகக் கூறப்​படும் தலைமறைவாக உள்ள ஜமாலுதீன், சாகுல் ஹமீது ஆகிய இரு​வரை​யும் கைது செய்ய தனிப்​படை​யினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT