நாசிக்: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் நாசிக் கிளை அலுவலகத்தில் பாலியல் புகார்களைத் தொடர்ந்து 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐடி துறையின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ்-சில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, டீம் லீடர் உட்பட 6 பேரைக் கைது செய்துள்ளனர்.
இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர் பாளர் கூறியதாவது: பணியிடத்தில் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் மற்றும் கட்டாயப்படுத்துதல் போன்ற செயல்களை டிசிஎஸ் நிறுவனம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதே எங்களது முதன்மையான நோக்கம். நாசிக் அலுவலகத்தில் நடந்த விவகாரம் நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தவுடனேயே, குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை நடத்தி வரும் விசாரணைக்கு நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. காவல்துறையின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.