சிவகங்கை அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். 
க்ரைம்

தற்கொலை செய்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து சிவகங்கை அரசு மருத்துவமனை முற்றுகை

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மானாமதுரை அருகே கீழப்பிடாவூரைச் சேர்ந்த ரமேஷ் (24) கடந்த அக்.27-ம் தேதி விஷm குடித்தார். ஆபத்தான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் காதல் பிரச்சினையில் சிலர் மிரட்டியதாலே ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குபதிவு செய்ய வலியுறுத்தியும் அந்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் தலைமையில் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அங்கு வந்த மானாமதுரை டி.எஸ்‌பி சுந்தரமாணிக்கம், இன்ஸ்பெக்டர் சேது ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு, உடலை வாங்கி சென்றனர்.

SCROLL FOR NEXT