விபத்துக்குள்ளான கார் 
க்ரைம்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

எஸ்.நீலவண்ணன்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

அருப்புக்கோட்டையை சேர்ந்த வேல் பாண்டியன் தனது குடும்பத்தினருடன் சென்னை, வேளச்சேரியில் தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், சென்னையில் இருந்து காரில் அருப்புக்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த கார், திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் அருகே இன்று (அக். 31) அதிகாலை 5 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஓட்டுநர் கௌதம் (28), வேல் பாண்டியன் (37), அவரது உறவினர் சுப்புலட்சுமி( 50) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், காரில் பயணம் செய்த முருகேசன் (56), பேச்சியம்மாள் (55), ஜெயந்தி (60), லட்சுமிபிரியா (27), வேல்பாண்டியன் குழந்தைகள் கமலினி (3), அருள்சுனை யாழினி (5) ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் டிஎஸ்பி கணேசன் தலைமையிலான மயிலம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT