சித்தரிப்புப் படம். 
க்ரைம்

நெல்லை அருகே குளத்தில் வீசப்பட்ட வெளிநாட்டு துப்பாக்கி: போலீஸார் தீவிர விசாரணை

அ.அருள்தாசன்

திருநெல்வேலி அருகே குளத்தில் வீசப்பட்ட வெளிநாட்டுத் துப்பாக்கியை மீட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி ராமையன்பட்டி அருகேயுள்ள கண்டியப்பேரி குளத்தில் கரையோரம் மர்ம பார்சல் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் உள்ளிட்ட போலீஸார் அங்கு சென்று அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் கைத்துப்பாக்கி மற்றும் 2 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.

7 எம்எம் ரகத்தை சேர்ந்த இந்த துப்பாக்கி லண்டனில் தயாரிக்கப்பட்டது. அத் துப்பாக்கியை கைப்பற்றிய போலீஸார் திருநெல்வேலி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

குளத்தில் துப்பாக்கியை வீசியவர்கள் யார், அது எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT