க்ரைம்

போலீஸாரைக் கண்டித்து திண்டுக்கல்லில் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் 

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்லில் திருநங்கையைத் தாக்கிய போலீஸாரைக் கண்டித்து திருநங்கைககள் கருப்பு உடை அணிந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள அடியனூத்து ஊராட்சி முத்தமிழ்நகரில் வசித்துவருபவர் திருநங்கை சமந்தா. இவருக்கும் எதிர் வீட்டை சேர்ந்த நபருக்கும் இடையே தகராறு இருந்துவந்துள்ளது.

இதுகுறித்து திருநங்கை சமந்தா திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீஸார் எதிர்வீட்டு நபருக்கு ஆதரவாக செயல்பட்டு திருநங்கை சமந்தாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் புகாரை திரும்பப்பெற மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. திருநங்கையை போலீஸார் தாக்கியதைகண்டித்து நேற்று

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீஸாரை கடுமையாக விமர்சித்து துண்டுபிரசுரங்களை திருநங்கைகள் வினியோகித்தனர். தொடர்ந்து திருநங்கையை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், திருநங்கை மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ்பெறவேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். திருநங்கைகள் அனைவரும் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT