க்ரைம்

மதுரை திருநகர் அருகே கோயிலில் கொள்ளை முயற்சி: போலீஸார் விசாரணை

என்.சன்னாசி

மதுரை திருநகர் அருகே சுந்தரம் நகரிலுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான வெற்றி விநாயகர் கோயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

வழக்கம்போல் இன்று காலை கோயில் பூசாரி கோயிலைத் திறந்து பார்த்தபோது கோயிலில் இருந்த உண்டியல் சேதமடைந்த நிலையிலும், கோயில் வளாகத்தில் பொருட்கள் அனைத்தும் சிதறியும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் திருநகர் போலீஸர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை மேற்கொண்ட பின்னர் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணை நேற்று இரவு குடிபோதையில் புகுந்த மர்ம நபர்கள் கோயிலின் உண்டியலைத் திருட முற்பட்டதும், முடியாதாதால் அங்கிருந்த பித்தளை பாத்திரங்கள் மற்றும் உலோக பொருட்களை திருடிச் சென்றுள்ளதும் தெரிந்தது.

தொடர்ந்து கோயில் வளாகத்தில் பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்ததால் வேறு ஏதேனும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா அல்லது கோயிலில் உள்ள சிலையைக் கடத்த முயற்சி செய்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT