சென்னை, தியாகராய நகர், மரியம் மன்சில் சாரதாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் நூரில் ஹக். இவர் துபாயில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குநராக முன்பு பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 30-ம்தேதி இரவு இவரது வீட்டுக்குள் நுழைந்த 8 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த நூரில் ஹக் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டு 250 பவுன் நகை, ரூ.95ஆயிரம், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ளவெளிநாட்டு கைக் கடிகாரம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து தப்பியது.
இதுதொடர்பாக பாண்டிபஜார்காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைக்கப்பட்டது. நூரில் ஹக் உறவினரான தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மொய்தீன்(29) என்பவர் தலைமறைவானார்.
எனவே, அவர்தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும்என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி விரைந்த தனிப்படை போலீஸார் அவரது தந்தை மற்றும் மனைவியிடம் விசாரித்து வருகின்றனர்.