விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் கத்தியைக் காட்டி எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் திருமால் தெருவைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன் (30). விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.
திடீரென 20 நாட்களுக்கும் மேலாக தகவல் தெரிவிக்காமல் விடுப்பில் சென்றதால் இவரை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது.
இதற்காக விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு சென்ற காவலர் மாயக்கண்ணன் அங்கிருந்த சக காவலர்களை மிரட்டி தகராறு செய்துள்ளார்.
அப்போது அங்கு சென்ற ஆயுதப்படை எஸ்.ஐ. சிவக்குமாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி காவலர் மாயக்கண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்.ஐ. சிவகுமார் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலர் மாயக்கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.