க்ரைம்

விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி: போலீஸ் விசாரணை

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியானார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகா தொகுதிக்கு உட்பட்டது மகாராஜபுரம்.

இன்று அதிகாலை மகாராஜபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின் பாதிப்பை சரி செய்ய வத்திராயிருப்பு கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் வயது 45 பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்து குறித்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT