க்ரைம்

வாட்ஸ்-அப் மூலம் கஞ்சா விற்ற 3 பேர் கைது

செய்திப்பிரிவு

வாட்ஸ்-அப் குழு அமைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரை ராயப்பேட்டை காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராயப்பேட்டை காவல் நிலைய தனிப்படை போலீஸாருக்கு, ராயப்பேட்டை, ரோட்டரி நகர் மற்றும் லாயிட்ஸ் ரோடு சந்திப்பு அருகே சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். அங்குகஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சென்னை பட்டாளம் கணேஷ் (34), ராயப்பேட்டை விஜய் தினேஷ் (30), திருவல்லிக்கேணி கீதன் (23) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 25 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் வாட்ஸ்-அப் குழு அமைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT