திருச்சி அருகே தாம்பத்ய உறவுக்கு மறுத்ததால் திரும ணமான ஒன்றரை மாதத்தில் மனைவியை ஆற்று நீருக்குள் மூழ்கடித்து கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியிலுள்ள வாழவந்தபுரத்தைச் சேர்ந்தவர் அருள்ராஜ்(30). இவருக்கும் கிறிஸ்டி ஹெலன் ராணி (26) என்பவருக்கும் கடந்த ஜூலை10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் பழைய கொள்ளிடம் பாலத்துக்கு அடியில் ஆடைகள் இன்றி கிறிஸ்டி ஹெலன் ராணி இறந்து கிடந்தார்.
தகவலறிந்த லால்குடி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற் றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கிறிஸ்டி ஹெலன் ராணி அணிந்திருந்த 2 பவுன் மற்றும் 3 பவுன் சங்கிலிகள், அரை பவுன் தோடு, கால் பவுன் மோதிரம் ஆகியவற்றை காணவில்லை எனத் தெரியவந்தது.
இதுகுறித்து அருள்ராஜ் மற் றும் அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரித்தனர். அப் போது, கிறிஸ்டி ஹெலன் ராணி அதிகாலை 3 மணியளவில் எழுந்து, இயற்கை உபாதை கழிப்பதற்காக கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்குச் சென்ற தாகவும், நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் தேடிப் பார்த்தபோது ஆடைகளின்றி ஆற்றில் சடலமாக கிடந்ததாகவும் கூறினர். மேலும், கிறிஸ்டி ஹெலன் ராணி பலாத்காரம் செய்யப்பட்டு, நகைகளுக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
ஆனால், அருள்ராஜின் நடவடிக்கைகளில் போலீஸாருக்கு சந்தேகம் இருந்ததால், அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, தாம்பத்ய உறவுக்கு மறுத்ததாலும், அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்று வந்ததாலும் ஆத்திரமடைந்து, இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மனைவியை ஆற்று நீருக்குள் மூழ்கடித்து கொலை செய்ததாகவும், அவரது நகைகளைக் கழற்றி வீட்டுக்கு அருகில் புதைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து நகைகளை தோண்டி எடுத்து பறிமுதல் செய்த போலீஸார், அருள்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒன்றரை மாதமே ஆவதால், கிறிஸ்டி ஹெலன் மரணம் குறித்து கோட்டாட்சியர் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.