நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை இணையத்தில் சிவக்குமார் பதிவு ஏற்றினார். இதுதொடர்பாக சிவக்குமாரை பள்ளிபாளையம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் குற்றம்சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 13 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.