க்ரைம்

மீஞ்சூர் அருகே அதிமுக கிளை செயலாளர் கொலை

செய்திப்பிரிவு

மீஞ்சூர் அருகே உள்ள வாயலூர், கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(32); அதிமுக வாயலூர் கிளைச் செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்று புழுதிவாக்கம் கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர், சிலம்பரசனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த சிலம்பரசனை பொதுமக்கள் மீட்டு, மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், ஏற்கெனவே சிலம்பரசன் உயிரிழந்தது தெரியவந்தது.

மீஞ்சூர் போலீஸார் சிலம்பரசனின் உடலை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT