சித்தரிப்புப் படம் 
க்ரைம்

மதுரையில் பாஜக இளைஞரணி பொறுப்பாளர் கார் கண்ணாடி உடைப்பு: அவனியாபுரம் போலீஸார் விசாரணை

என்.சன்னாசி

மதுரையில் பாஜக இளைஞரணி பொறுப்பாளர் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், பாஜக இளைஞரணி பொறுப்பாளராக உள்ளார். ரைஸ்மில் தொழிலும் நடத்துகிறார்.

கட்சிக் கொடி கட்டிய இவரது காரை வீட்டுக்கு அருகிலுள்ள காலியிடத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நிறுத்தினார். இன்று காலை 7 மணிக்கு பார்த்த போது, காரின் பின்பக்க கண்ணாடி சேதப்படுத்தப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக அவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சமூக விரோதிகள் தனது காரை உடைத்து சேதப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். சேதப்படுத்தப்பட்ட காரை ஆய்வு செய்தனர். அரசியல் ரீதியாக அவருக்கு பிரச்சினை உள்ளதா அல்லது தொழில் போட்டி காரணமாக கார் சேதப்படுத்தப்பட்டு இருக்குமா என்ற இருவேறு கோணத்திலும் அவனியாபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

திமுக எம்எல்ஏவுக்கு எதிராக பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டது தொடர்பாக கடந்த வாரம் ஊமச்சிகுளம் பகுதி பாஜக இளைஞ ரணி பொறுப்பாளர் சங்கர்பாண்டியை திமுகவினர் மிரட்டிய நிலையில், வில்லாபுரம் பகுதியில் மற்றொரு பொறுப்பாளரின் கார் கண்ணாடி அடைத்து நொறுக்கப்பட்டது. அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT