சிவகங்கை மாவட்டம் பள்ளிதம்பம் ஊராட்சி வேம்பனியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளப்படுகிறது. 
க்ரைம்

ஊரடங்கில் சிவகங்கை மாவட்டத்தில் அதிகரிக்கும் மணல், கிராவல் மண் கடத்தல்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

இ.ஜெகநாதன்

ஊரடங்கைப் பயன்படுத்தி சிவகங்கை மாவட்டத்தில் மணல், கிராவல் மண் கடத்தல் அதிகரித்து வருகிறது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பணிகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இந்த ஊரடங்கை பயன்படுத்தி சிவகங்கை மாவட்டத்தில் மணல், கிராவல்மண் கடத்தல் அதிகரித்து வருகின்றன.

சில தினங்களுக்கு முன்பு மானாமதுரை அருகே கால்பிரவு வைகை ஆற்று பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் டிப்பர் லாரிகளில் மணல் கடத்துவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதேபோல் நாட்டாறுகால் ஆற்றிலும் டிராக்டரில் மணல் கடத்தல் நடந்து வருகிறது.

இந்நிலையில் மூவர்கண்மாய் குரூப் பள்ளித்தம்பம் ஊராட்சி வேம்பனி பகுதியில் அனுமதியின்றி தனியார் இடத்தில் கிராவல் மண் அள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கில் வாகனங்களை கண்காணிக்க 33 இடங்களில் சோதனைச்சாவடிகள் உள்ளன.

ஆனால் மணல், மண் கடத்தல் லாரிகள் தாராளமாக சிவகங்கை மாவட்டத்தில் வலம் வருகின்றன.

ஊரடங்கை பயன்படுத்தி அதிகரித்து வரும் மணல், கிராவல் மண் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT