பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

கரோனா லாக்-டவுனிலும் கொடூரம்: போபாலில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண் பலாத்காரம்- போலீஸார் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வரும் அரசு வங்கி மேலாளரான 53 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி அங்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை போபால் ஷாபுரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இந்த கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி என்று கூறப்படுகிறது. லாக்-டவுனினால் இவரது கணவர் ராஜஸ்தானில் சிக்கியுள்ளதால் இவர் குடியிருப்பில் தன் ஃபிளாட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இது தொடர்பாக பாதுகாப்பு பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில் போலீஸார் இந்தச் சம்பவத்தில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க துப்பு கிடைக்காமல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாடிப்படிகளை பயன்படுத்தி பலாத்கார நபர் 2வது தளத்துக்குச் சென்றதாக தெரிய வந்துள்ளது. பால்கனி வழியாக நுழைந்து பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் ஐயம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..

SCROLL FOR NEXT