க்ரைம்

மதுரை தனக்கன்குளம் அருகே சாலையைக் கடக்க முயன்ற தம்பதி மீது கார் மோதி விபத்து: இருச்சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் பலி

என்.சன்னாசி

மதுரை தனக்கன்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற தம்பதி மீது கார் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (65). இவரது மனைவி வசந்தி (60). இவர்கள் பெட்டிக்கடை வைத்திருந்தனர்.

இருவரும் நாகமலைபுதுக்கோட்டை பகுதியிலுள்ள சீனிவாச நகரிலுள்ள உறவினர் குழந்தையை பார்க்க, இன்று காலை இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.

சுமார் 11 மணியளவில் தனக்கன்குளம் அருகே நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றனர். அப்போது, சமயநல்லூரில் இருந்து திருமங்கலம் நோக்கி வேகமாகச் சென்ற கார் ஒன்று அவர்கள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஆஸ்டியன்பட்டி போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், இந்த விபத்து பற்றி போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT