தற்கொலை செய்துகொண்ட கனகசபை- கோப்புப் படம் 
க்ரைம்

நடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலை வழக்கில் மற்றொரு அண்ணன் கைது

செ.ஞானபிரகாஷ்

நடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலை வழக்கில் மற்றொரு அண்ணன் அவரது மகனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி திருமுடி நகரை சேர்ந்தவர் கனகசபை . இவர் நடிகர் ஆனந்தராஜியின் தம்பி., திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்தார். மேலும் ஏலச்சீட்டு மற்றும் வட்டி தொழில் செய்து வந்தார். கடந்த 4ம் தேதி இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பெரியக்கடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கனகசபை எழுதியிருந்த நான்கு கடிதங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நடிகர் ஆனந்தராஜ், எனது தம்பி தற்கொலைக்கு கடன் பிரச்சினை காரணமல்ல- அவரது வீட்டை அபகரிக்க கொடுத்த மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே தற்கொலை பிரிவில் பதிந்திருந்த இந்த வழக்கை, தற்கொலைக்கு தூண்டிய பிரிவுக்கு போலீஸார் மாற்றம் செய்தனர். மேலும் கனகசபை தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அவரது அண்ணன் பாஸ்கர் (எ) அண்ணாமலை (56), அவரது மகன் சிவச்சந்திரன் (30) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT