க்ரைம்

உசிலம்பட்டி அருகே பெண் சிசு சந்தேக மரணம்: போலீஸ் தீவிர விசாரணை- அடுத்தடுத்து கிளம்பும் சர்ச்சையால் பதற்றம்

என்.சன்னாசி

உசிலம்பட்டி அருகே 18 நாட்களே ஆன பெண் சிசுவின் சந்தேக மரணம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை அருகே செக்கானூரணி பகுதியில், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையின் இறப்பில் சந்தேகம் எழுந்ததால் உடல் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் உசிலம்பட்டி அருகே பெண் சிசுவின் சந்தேக மரணம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

உசிலம்பட்டி கோவிலாங்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி 18-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தைகு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

இந்நிலையில், இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக நேற்று, செக்கானூரணி வைர முருகன்-சவுமியா தம்பதி தங்களது 2-வது பெண் குழந்தையை உறவினர்களுடன் சேர்ந்து சிசுக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

அக்குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்றனரா அல்லது கழுத்தை நெரித்துக் கொலை செய்தனரா என்பது குறித்து போலீஸார் பெற்றோர் உட்பட மூவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், உசிலம்பட்டி அருகே 18 நாட்களே ஆன பெண் சிசுவின் சந்தேக மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT