கோப்புப் படம். 
க்ரைம்

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 அறைகள் தரைமட்டம்; ஒருவர் பலி

இ.மணிகண்டன்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடான் பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. இதில் குருசாமி என்பவர் சம்பவ இடத்திலே பலியானார்.

மேலும் சின்ன முனியாண்டி என்பவர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகாசியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ கொளுந்துவிட்டு எரிவதால் கட்டிட இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது தெரியவில்லை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கடந்த 19ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT