நெல்லையில் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவனைக்கு அழைத்துவரப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில் சில மணி நேரங்களிலேயே சிக்கினார்.
நெல்லை மாவட்டம் ஊர்மேல்லழகியானைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம்.
மனைவியை அடித்து தாக்கி வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் பாளையாங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை இவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டார்.
அப்போது போலீஸாரை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதனையடுத்து இவரை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் நெல்லை ரயில்வே சந்திப்பில் இவர் போலீஸாரிடம் சிக்கினார். தப்பியோடிய கைதியை சில மணி நேர்ங்களிலேயே பிடித்தது போலீஸாருக்கு ஆறுதலாக அமைந்தது.