அருபுக்கோட்டை அருகே இன்று காலை காரும் கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மனைவி பலியானார், கணவன் படுகாயமடைந்தார்.
மதுரையைச் சேர்ந்த ஞானராஜ் - ஜோஸ்மின்மேரி தம்பதியர் தங்களது காரில் கோயிலுக்குச் செல்வதற்காக மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர்
அப்போது அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது பாளையம்பட்டி விலக்கில் இவர்கள் வந்த காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது.
இதில், கார் நிலைதடுமாறி நான்கு வழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மறுபக்க சாலைக்குச் சென்று தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது
விபத்தில் காரில் பயணம் செய்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் உடனடியாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி படுகாயமடைந்த ஜோஸ்மின் மேரி பரிதாபமாக உயிரிழந்தார்
ஜோஸ்மின்மேரி ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை என்பது குறிப்பிடத்தக்கது படுகாயமடைந்த ஜோஸ்மின்மேரியின் கணவர் ஞானராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தால் சிறிது நேரம் தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.