க்ரைம்

சிவகாசி அருகே சிறுமி மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 9 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சிவகாசி வேண்டுராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த அச்சிறுமி 4-ம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிறுமியின் மூத்த சகோதரியுடன் அருகில் உள்ள வயல் வெளியில் ஆடு மேய்துக்கொண்டிருந்துள்ளார். திடீரென அச்சிறுமி தனது சகோதரியிடம் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிய மூத்த சகோதரி தங்கை வீடு திரும்பாததைக் கேட்டு அதிர்ந்துள்ளார் உடனே பெற்றோர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் சிறுமியைத் தேடியுள்ளனர். சிறுமி நீண்ட நேரமாகியும் எங்கு தேடியும் கிடைக்காததால் அச்சமடைந்த பெற்றோர் மல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்தள்ளனர்.

புகாரை அடுத்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சிறுமியைத் தொடர்ந்து தேடுடி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சிறுமி காணாமல் போன சம்பவம் இக்கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி மர்ம மரணம் குறித்து மல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT