க்ரைம்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை

செய்திப்பிரிவு

மதுரையில் உள்ள பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக வந்த மிரட்டலில் மதுரையில் உள்ள பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மதுரை போலீஸார் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மிரட்டல் விடுத்த நபரை சென்னையில் போலீஸார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

SCROLL FOR NEXT