படங்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
க்ரைம்

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி: மின்மாற்றியில் ஏறி மிரட்டியவர் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராட்டம்

என்.சன்னாசி

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரைச் சேர்ந்தவர் சக்தி. ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பான விசாரணைக்காக சக்தி இன்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வளாகத்திலிருந்த மின்மாற்றியில் ஏறினார்.

தன் மனைவியை நினைத்து கதறி அழுதார். சுற்றியிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அவரைக் கீழே இறங்கச் சொல்லி கூச்சலிட்டனர்.
ஆனால், அந்த நபரோ எதுவும் காதில் விழாமல் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார்.

திடீரென மின்மாற்றியில் இருந்த ஒயரைத் தொட்டார். அடுத்த விநாடியே அவர் மீது குபீரென்று நெருப்பு பற்றியது. அந்த நபர் கீழே சரிந்தார். அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த நபர் இருப்பதாக மருத்துவமனை தரப்பு தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT