க்ரைம்

ஒடிசாவில் இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம் பெண் கைது: ஒருதலை காதல் விவகாரமா என போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

ஒடிசாவில் இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம் பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ளது ஜகட்பூர். இப்பகுதியைச் சேர்ந்தவர் அலேக் பரீக்.

கடந்த செவ்வாய்க் கிழமை மாலை இவர் கட்டாக் மாவட்டத்தின் ஷிக்காரிபூர் பகுதியில் உள்ள பாரிக் சாஹி எனுமிடத்தில் இருந்தபோது ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானார்.

அவர் மீது இளம் பெண் ஒருவர் ஆசிட் வீச வேதனையில் அலறித் துடித்த அந்த இளைஞரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் அந்த இளைஞர் தன்னை ஒருதலையாக காதலித்துவந்த பெண்ணே தன் மீது ஆசிட் வீசியதாகக் கூறினார்.
இதனையடுத்து ஜகட்பூரிலிருந்து சம்பந்தப்பட்ட பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

ஆனால், ஜகட்பூர் பகுதி மக்களோ அலேக் பரீக்கும் அந்தப் பெண்ணும் ஒருவொருக்கொருவர் காதலித்து வந்தனர். ஏதோ சர்ச்சையால் இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்றனர்.

சம்பவம் குறித்து கட்டாக் மாநகர காவல் துணை ஆணையர் விசாரணை நடத்தினார். அவரும் இருவருக்கும் இடையே உறவு இருந்ததையும் உறவுச் சிக்கலால் இச்சம்பவம் நடந்ததையும் உறுதிப்படுத்தினார். தொடர்ந்து கைதான இளம் பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT