க்ரைம்

விருதுநகரில் பெண் எஸ்.ஐ. விஷம் குடித்து தற்கொலை முயற்சி

இ.மணிகண்டன்

விருதுநகர்

விருதுநகரில் பெண் எஸ்.ஐ, ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்ட காவல்துறையில் கைரேகை பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சரண்யா.

விருதுநகரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் கைரேகை பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. சரண்யா ஆறு மாதங்களுக்கு முன்பே அங்கு பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில் குடும்பப் பிரச்சினை காரணமாக உதவி ஆய்வாளர் சரண்யா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

குடும்பத்தினர் அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உதவி ஆய்வாளர் சரண்யா அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண் உதவி ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விருதுநகர் மாவட்ட போலீஸார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT