கோப்புப் படம் 
க்ரைம்

பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: துப்பாக்கியுடன் திரியும் 2 ரவுடிகளுக்கு வலை

செய்திப்பிரிவு

கேளம்பாக்கம்

தாழம்பூர் அருகே வேங்கடமங்கலத் தில் பாலிடெக்னிக் மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவத்தில் 2 ரவுடிகள் மீது போலீஸாரின் பார்வை திரும்பி யுள்ளது. துப்பாக்கியை போலீ ஸார் கைப்பற்றியுள்ள நிலையில் ரவுடிகள் வேட்டையை தொடங்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வண்டலூரை அடுத்த வேங்கட மங்கலம், பஜனை கோயில் தெரு வைச் சேர்ந்தவர் ஷோபனா(42). இவரது கணவர் சில ஆண்டு களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் முகேஷ்(19) தனியார் பாலிடெக்னிக் கல்லூரி யில் படித்து வந்தார். முகேஷும் அருகில் உள்ள பார்கவி அவென்யு பகுதியில் வசிக்கும் விஜய்யும்(19) நண்பர்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் முகேஷ், தனது நண்பன் விஜய்யை பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் இருந்தவர்கள் விஜய்யின் அறைக்கு வந்தபோது விஜய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். முகேஷ் ரத்த வெள்ளத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கிடந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது முகேஷ் இறந்தார். இது தொடர்பாக தாழம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் தப்பியோடிய விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த 6-ம் தேதி சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விஜய்யை காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்

இந்த விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. வேலைக் காகவும், படிப்புக்காகவும் வரும் இளைஞர்கள் பலர் தாழம்பூர், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியுள்ளனர். ரவுடிகள் சிலர் தங்கள் வலையில் சிக்குபவர்களை பயன்படுத்தி மாணவர்களிடமும், இளைஞர்களிடம் கஞ்சாவை விற்பனை செய்து வருகின்றனர்.

பிறரை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் சில ரவுடிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் துப்பாக்கியும் தாராளமாக புழக் கத்தில் இருந்து வருகிறது. இது போல் பல ரவுடி குழுக்கள் அந்தப் பகுதியில் இயங்கி வருகின்றன.

இந்தக் குழுக்களில் ஒன்று பெருமாட்டுநல்லூர் செல்வம் தலைமையில் செயல்படுகிறது. இந்த குழுவினருடன் விஜய்க்கு பழக்கம் இருந்துள்ளது. இவர்கள் மூலம் விஜய்க்கு துப்பாக்கி கிடைத்தது தெரிய வந்தது. விஜய் கூறிய தகவலின் அடிப்படையில் துப்பாக்கியை போலீஸார் பறி முதல் செய்தனர். மேலும் பெரு மாட்டுநல்லூர் செல்வம் உள்ளிட்ட 2 முக்கிய ரவுடிகளை போலீஸார் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர்.

முன்விரோதம் இல்லை

மேலும் விஜய்க்கும், முகேஷுக் கும் மோதலோ, முன்விரோதமோ இல்லை. இந்நிலையில் ஏன் முகேஷ் சுடப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். தன் வீட்டுக்கு வந்த முகேஷிடம் அவரது நண்பரான விஜய் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக கூறியுள்ளார்.

முகேஷ் அதனைப் பார்க்க விரும்ப, அவரிடம் எடுத்துக் காட்டியுள்ளார். இது எப்படி செயல் படும் என்பது குறித்து அவரிடம் விளக்கும்போது தவறுதலாக வெடித்ததில் முகேஷ் இறந் தாக போலீஸாரிடம் விஜய் கூறியுள்ளார்.

பெரும்பாலும் கொலையாளி கள் கொலை செய்பவரை தேடிச் செல்வர். இந்த வழக்கில் விஜய்யின் வீட்டுக்கு முகேஷ் சென்றுள்ளார். மேலும் விஜய் கூறிய சம்பவங்கள், முகேஷ் உடலில் குண்டு பாய்ந்த இடம், அவர்கள் இருந்த இடம் ஆகியவை சரியாக வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால் போலீஸார் பார்வை விஜய் மீதிருந்து, தற்போது துப்பாக் கியுடன் வலம் வரும் ரவுடிகள் பக்கம் திரும்பியுள்ளது. ரவுடிகளின் வலைகளில் சிக்கும் சாதாரண இளைஞர்களை மட்டும் இந்த வழக்கில் சேர்ப்பதை விட்டுவிட்டு ரவுடிகள் வேட்டையை தொடங்க போலீஸ் உயர் அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் விஜய் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தேவைப்பட்டால் மீண்டும் விஜய்யை போலீஸ் காவலில் எடுக்கவும் போலீஸார் திட்டமிட் டுள்ளனர்.

தேனி நீதிமன்றத்தில் ரவுடி சரண்

ரவுடி செல்வம் தலைமறைவாக இருந்தநிலையில் தேனி குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். இவ் வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் வரும் 18-ம் தேதி செல்வத்தை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்

SCROLL FOR NEXT