க்ரைம்

பெண் தாசில்தார் கொலையால் கிளம்பிய பீதி: கயிறு கட்டி மனு வாங்கும் கர்னூல் தாசில்தார் 

செய்திப்பிரிவு

கர்னூல்

பெண் தாசில்தார் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள தாசில்தாரான உமா மகேஸ்வரி, தன்னை சந்திக்கவரும் பொதுமக்கள் கயிற்றின் பின்னால் இருந்து மட்டுமே அவருடன் பேசவும் மனு அளிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் அப்துல்லாபூர் மேட் மண்டலத்தில் தாசில்தாராக பணியாற்றியவர் விஜயாரெட்டி.
இவரை, கடந்த திங்கட்கிழமை விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார். பின்னர், தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி சுரேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கர்னூல் மாவட்ட தாசில்தாரான உமா மகேஸ்வரியை சந்திக்கவரும் கிராமவாசிகள், அவரது அறையில் போடப்பட்ட கயிற்றின் பின்னால் இருந்து மட்டுமே அவருடன் பேசவும் மனு அளிக்கவும் அனுமதிக்கிறார்.

இது குறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "நேற்று சிலர் என்னை சந்திக்கவந்தனர். அவர்கள் வரும்போதே நன்றாக மது அருந்தி இருந்தனர்.

பெண் தாசில்தார் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தகைய நபர்களால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே பொதுமக்களிடம் மனுவாங்கிய ஒரு மணி நேரம் மட்டும் கயிறு கட்டிவைத்திருந்தேன். பின்னர் அந்தக் கயிறு அகற்றப்பட்டது. " என்றார்.

-ஏஎன்ஐ

SCROLL FOR NEXT