சேப்பாக்கத்தைச் சேர்ந்த திமுக வட்ட செயலாளர் கண்ணன் (55). இவரது மகன்கள் கவித்திறன் (26), நிவிதிறன் (24). இந்நிலையில், படத்தில் நடிக்க வைப்பதாகவும், படம் எடுப்பதாகவும் கூறி மூர்த்தி என்ற மாணவரிடம் இருந்து அவர் கல்வி கட்டணம் செலுத்த வைத்திருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை இவர்கள் மூவரும் பெற்றுள்ளனர்.
ஆனால் உறுதி அளித்தபடி வாய்ப்பு வாங்கிக் கொடுக்கவில்லை.
வாங்கிய பணத்தையும் திரும்பச் செலுத்தவில்லை. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி மூர்த்தி தான் கொடுத்த பணத்தை கேட்டபோது, அவர் மீது மூவரும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணன், கவித்திறனை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்துள்ளனர். நிவிதிறனைத் தேடி வருகின்றனர்.