திருச்சி
திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை வழக்கு தொடர்பாக சுரேஷிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் 1.5 கிலோ தங்க நகைகள், மினி வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில், கடந்த அக்.10-ம் தேதி செங்கம் நீதிமன்றத்தில் சரண டைந்த சுரேஷிடம் 7 நாட்கள் காவலில் விசாரிக்க கோட்டை குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஜே.எம்-2 நீதிமன்றம் கடந்த 14-ம் தேதி அனுமதியளித்தார்.
அதன்பேரில் கோட்டை குற்றப் பிரிவு போலீஸாரும், தனிப்படை போலீஸாரும் சுரேஷை ரகசிய இடத்தில் வைத்து கடந்த ஒரு வார மாக விசாரணை நடத்தினர். 7 நாட் கள் முடிவுற்ற நிலையில், சுரேஷை நேற்று ஜே.எம்-1 நீதிபதி (பொறுப்பு) திரிவேணி முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
அப்போது, சுரேஷிடம் மேற் கொண்ட விசாரணையின் அடிப் படையில், திருச்சி கல்லணை அருகே மறைத்து வைத்திருந்த ரூ.68 லட்சம் மதிப்புள்ள 1,499.87 கிராம் தங்கம், கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்டு மணிகண்டம் அருகே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3 கையுறைகள், 1 கடப் பாரை, 1 ஸ்குரூ டிரைவர் ஆகிய வவை மற்றும் கொள்ளையடித்த நகைகளுடன் தப்பிச் செல்ல பயன் படுத்திவிட்டு திருவண்ணாமலை யில் மறைத்து வைத்திருந்த டிஎன் 50 எல்2858 என்ற பதிவு எண்ணுள்ள மினி லாரியையும் பறிமுதல் செய்த தாக நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, நவ.4-ம் தேதி வரையில் சுரேஷை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதி பதி உத்தரவிட்டார். இதற்கிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கிலும் சுரேஷ் முக் கிய குற்றவாளியாக இருப்பதால், அவரிடம் 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி ரங் கம் நீதிமன்றத்தில் கொள்ளிடம் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.