துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் பயணி ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கடத்திவந்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள 692 கிராம் தங்கம் பிடிபட்டது.
மதுரை விமான நிலையத்தில் துபாயிலிருந்து மதுரை வந்த விமானத்தில் தங்கம் கடத்துவதாக வந்த தகவலையடுத்து மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்றிரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடலுார் மாவட்டத்தை சேர்ந்த அன்வர் பாட்சா மகன் சர்புதின் (வயது 39) என்பவர் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடியதால் அவரைப் பின் தொடர்ந்து வெளியே வந்தனர்.
திருச்சியைச் சேர்ந்த அப்துல் காதர், மற்றும் அவரதுது நண்பர் அல்லாபிச்சை இருவரும் சர்புதீனிடமிருந்து துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 692 கிராம் எடையுள்ள ரூபாய் 24 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கைத்தை பெறும்போது சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவில் சிக்கினர் .
பின்னர் மூவரையும் கடத்தல் தங்கம் குறித்து மதுரை விமான நிலைய சுங்க இலாகா நண்ணறிவு பிரிவினர் விசாரணை செய்து வருகிறனர்.