க்ரைம்

திருநங்கைகள் போல் நடித்து பணம் பறித்த இருவர் கைது

செய்திப்பிரிவு

கோவை

திருப்பூர் பிச்சாம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் விக்னேஷ்குமார் (24). இவர், கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படித்தார். மாற்றுச்சான்றிதழ் தொலைந்துவிட்டதால், அதை வாங்க கோவை பீளமேட்டில் உள்ள கல்லூரிக்கு வந்தார். அப்பகுதியில் நடந்து வந்தபோது, 2 திருநங்கைகள் விக்னேஷிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் ரூ.10 அளித்துள்ளார். அதை ஏற்க மறுத்த இருவரும், விக்னேஷை மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்துள் ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பீளமேடு போலீஸார், மூவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பணம் பறித்த இருவரும் திருநங்கைகள்தானா என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து விசாரித்த தில், கவுண்டம்பாளையம் டி.வி.எஸ்.நகரைச் சேர்ந்த மணி (32), ஆனந்தன் (36) என்பது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த ரூ.4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அதோடு, வேறு எங்கேனும் இதுபோன்று பணம் பறித்துள்ளார்களா என்று விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT