க்ரைம்

ஊழியரிடம் ரூ.20 லட்சம் கொள்ளை முயற்சி: பாதுகாவலர் துப்பாக்கியை காட்டியதால் தப்பி ஓடினர்

செய்திப்பிரிவு

சென்னை

தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.20 லட்சம் கொள்ளையடிக்க முயன்றபோது, நிறுவன காவலாளி துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர்.

சென்னை தி.நகரில் உள்ள பாரதி நகர் 2-வது தெருவில் அட்டிகா கோல்டு நிறுவனம் உள்ளது. இங்கு கிரிஷ் என்பவர் காசாளராக இருக்கிறார். 2 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள நிறுவனத் துக்குச் சென்ற கிரிஷ், ரூ.20 லட் சம் பணத்துடன் சென்னை திரும்பினார். நேற்று காலையில் பேருந்து மூலம் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இறங்கினார். பின்னர் நிறுவன செக்யூரிட்டி சந்திரக்குமார் என்பவ ருடன் சேர்ந்து இரு சக்கர வாக னத்தில் தி.நகர் அலுவலகத்துக்கு வந்தார்.

கிரிஷ், அலுவலகத்துக்குள் நுழைந்ததும், காரில் பின் தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென அலுவலகத்துக் குள் புகுந்து, கிரிஷ் வைத்திருந்த ரூ.20 லட்சம் பணத்தை பறிக்க முயன்றது. ஆனால் பையை கொடுக்காமல் அவர்களுடன் கிரிஷ் போராடினார். அப்போது அலுவலகத்துக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சையத் சுல்தான், தான் வைத்திருந்த துப் பாக்கியை காட்டி கொள்ளையர் களை சுடப்போவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன கொள்ளை யர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து ஓடி, காரில் தப்பிச்சென்றனர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா வில் பதிவாகி உள்ளன.

முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்கள் கைத்துப்பாக்கி மற்றும் இரும்புக் கம்பியை வைத் திருந்தாகவும், இந்தி மொழியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து பாண்டி பஜார் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT