க்ரைம்

கோவையில் கைதான பிரபல சென்னை தாதா : வேலூர் சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

கோவையில் கைது செய்யப்பட்ட பிரபல தாதா அரும்பக்கம் ராதாகிருஷ்ணன் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அரும்பாக்கம் காவல் நிலையத்தில் A+ கேட்டகிரி ரவுடியான அரும்பாக்கம் ராதா என்கின்ற ராதாகிருஷ்ணன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 341 294( b) 323 336 397 506 (ii) r/w TNPPDL ACT-ன் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஜூலை மாதம் நீதிமன்ற நிபந்தனை ஜாமினில் தினமும் காலை 10:00 மணிக்கு அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும். என்ற நிபந்தனையுடன் பிணையில் வெளியே வந்து காவல் நிலையத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவானார்.

இதனால் நிபந்தனை ஜாமின் கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு நீதிமன்ற அளித்த பிடி ஆணையின் படி அரும்பாக்கம் ராதா( எ) ராதாகிருஷ்ணனை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி கோயம்புத்தூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் தனிப்படை போலீஸார் ராதாகிருஷ்ணனை பிடித்தனர்.

பின்னர் கோவைச் சென்ற அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சங்கரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட ராதாகிருஷ்ணனை சென்னை அழைத்து வந்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அரும்பாக்கம் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவு படி புழல் சிறையில் அடைக்க சென்ற போது புழல் சிறை அதிகாரிகள் வேலூர் சிறைக்கு செல்லுமாறு எழுதிக் கொடுத்தனர்.

இதையடுத்து அதிகாலை 3 மணி அளவில் அரும்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து வேலூர் சிறையில் ராதாகிருஷ்ணனை அடைக்க அழைத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT