க்ரைம்

நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த போலி நீதிபதி உட்பட 2 பேர் கைது

செய்திப்பிரிவு

தருமபுரி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் என்பவருக்கு தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியை அதியமான்கோட்டை பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் போலி ஆவணம் மூலம் தன் நிலம் என நம்பவைத்து சிலருக்கு விற்பனை செய்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெகநாதன் நீதிமன்றத்தை நாடியபோது நீதித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்ப டும் சமரச தீர்ப்பாயத்தில் பங்கேற்று தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு ஜெக நாதனுக்கு தகவல் அளிக்கப்பட் டது. தருமபுரியில் நடந்த அந்த தீர்ப் பாயத்தில் ஜெகநாதன் பங்கேற்ற நிலையில், ‘நிலம் நாகராஜனுக்கு சொந்தமானது’ என தீர்ப்பளிக் கப்பட்டது. இதை எதிர்த்து ஜெக நாதன் சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்தார். அப்போது தான், தருமபுரியில் நடத்தப்பட்டது போலி சமரச தீர்ப்பாயம் என தெரியவந்துள்ளது.

பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக நாகராஜன், அவருக்கு துணையாக இருந்த வழக்கறிஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

போலி சமரச தீர்ப்பாய நீதிபதி யாக செயல்பட்ட மேட்டுப்பாளை யம் சந்திரன் (54), அவரது பாதுகாவ லராக செயல்பட்ட திருவண்ணா மலை குமார் (48) தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில், போலீ ஸார் நேற்று முன்தினம் இரவு கரூர் மாவட்டத்தில் இருவரையும் கைது செய்தனர். பின்னர், இரு வரையும் தருமபுரி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT