சிவகங்கை
சிவகங்கை அருகே மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் ஒருவர் பலியானார். சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியைச் சேர்ந்த மூக்கையா மகன் ஆதித்தியன் (8). இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது தந்தையுடன் வயலுக்குச் சென்றார்.
மூக்கையா பம்ப்செட் மோட்டாரை இயக்கிக் கொண்டிருந்தபோது மின்கம்பம் அருகே இருந்த இழுவை கம்பியை ஆதித்தியன் பிடித்தார். இதில் மின்சாரம் தாக்கி ஆதித்தியன் படுகாயமடைந்தார். சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆதித்தியன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பூவந்தி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல்லில் ஒருவர் பலி:
இதேபோல் திண்டுக்கல் அருகே காமாட்சிபுரத்தைச் சேர்ந்த கிறிச்தவம்ராஜ் மகன் பாஸ்கர் (23), நேற்று மின்சாரம் தாக்கி இறந்தார். திண்டுக்கல் பிஸ்மிநகரில் கேபிள் டிவி எச்டி பாக்ஸ் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மேலும், வேடசந்தூர் அருகே கக்காம்பட்டியை சேர்ந்த சரவணன் மகன் ராகுல்டேனியல் (8) காலாண்டு தேர்வு விடுமுறைக்காக தாடிக்கொம்பு அருணாச்சலம் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அறியாமல் மின் கம்பியைத் தொட்டத்தில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாடிக்கொம்பு போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.