neet impersonation case 
க்ரைம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு: 3 தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் விசாரணை

செய்திப்பிரிவு

தேனி/வாணியம்பாடி

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக் கில் சென்னையைச் சேர்ந்த 3 தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் தேனி சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா(20) என்கிற மாணவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவரையும், இவரது தந்தை டாக்டர் வெங்கடேசனையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

இவர்கள் அளித்த வாக்குமூலத் தின்பேரில் சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் ராகுல், பிரவீன், மாணவி அபிராமி ஆகியோரிடம் தேனியில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்தனர். அப்போது உதித் சூர்யா உட்பட 4 மாணவர் களும் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஏற்கெனவே சேர்ந்துள்ளனர்.

அக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் படிப்பைத் தொடர முடியவில்லை. வேறு மருத் துவக் கல்லூரியில் சேர விரும்பிய போது நீட் தேர்வு அறிமுகமானது. அதில் இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. எனவே ஆள் மாறாட்டம் மூலம் தேர்வு எழுதிய தாக தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட மாணவர்கள் சிலரது பெயரில் மற்றொருவர் மும்பை, புனே, லக்னோ போன்ற மையங் களில் தேர்வு எழுதியதும், அதில் அதிக மதிப்பெண் பெற்றதால் அந்த சான்றிதழ் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததும் விசார ணையில் தெரியவந்தது.

தற்போது பிடிபட்ட 3 மாணவர் களும் சென்னையில் உள்ள தனி யார் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை சத்யசாய் மருத்துவக் கல்லூரி முதல்வர் பிரேம்நாத், கண்காணிப்பாளர் சுகு மாறன், பாலாஜி மருத்துவக் கல் லூரி முதல்வர் சிவக்குமார், எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி முதல்வர் சுந்தரம் ஆகியோர் விசாரணைக்காக தேனி சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.

மாணவி விடுவிப்பு

இதற்கிடையேதேனி சிபிசிஐடி அலுவலகத்தில் மருத்துவ மாணவி அபிராமி அவரது தந்தை மாதவன் ஆகியோரிடம் நேற்று மாலை வரை விசாரணை நடைபெற்றது. அப் போது அபிராமி, தான்முறையாக நீட் தேர்வு எழுதி கல்லூரியில் சேர்ந் ததாகக் கூறி அதற்கான ஆவணங் களை தாக்கல் செய்துள்ளார். புகைப்படத்தில் மட்டும் சிறிய மாறு பாடு இருந்ததால் அவை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே அபிராமி தற்காலிகமாக விடுவிக்கப் பட்டுள்ளார். விசாரணைக்கு வர வேண்டும் என்று உத்தரவாதத்து டன் அவர் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்த னர்.

மகன் தலைமறைவு; தந்தை கைது

இந்நிலையில் நீட் முறைகேடு தொடர்பாக தருமபுரி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முகமது இர் பான் என்ற மாணவரை போலீஸார் தேடிவருகின்றனர். இவரது தந்தை டாக்டர் முகமது சபியை கைது செய் தனர். இதற்கிடையே மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸை 15 நாள் காவலில் வைக்க தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன் றம் நேற்று உத்தரவிட்டது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT