சென்னை
தமிழக காவல் துறைக்கு தொலைத் தொடர்பு கருவிகள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக காவல் துறைக்கு ரேடியோ, வயர்லஸ் கருவிகள் போன்ற தொலைத்தொடர்பு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து நவீன கருவிகள் வாங்குவதற்கான பணிகளை தமிழக காவல் துறை யின் தொழில்நுட்ப சேவை பிரிவு மேற்கொண்டு வருகிறது. புதிய கருவிகளை வாங்க பல்வேறு நிறுவனங்களுக்கு டெண்டர் விடப் பட்டுள்ள நிலையில், டெண்டர் நடைமுறையில் ஊழல் நடந்திருப் பதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவின் பேரில் தமிழக டிஜிபி திரிபாதி, கடந்த 19-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார்.
லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணை யில் ரூ.350 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் உள்ள முக்கிய அதிகாரி உட்பட ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கும், தற்போது பதவியில் இருக்கும் உயர் காவல் அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் அதிகமான டெண்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது விசா ரணையில் தெரியவந்துள்ளது. 16 மாவட்ட காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்க விடப் பட்ட டெண்டரில் 10 மாவட்டங் களுக்கான டெண்டர் ஒரே நிறுவ னத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது சந் தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகுதியுள்ள பல நிறுவனங்கள் டெண்டர் கோரிய நிலையில் காவல் துறை உயர் அதிகாரி களின் அழுத்தம் காரணமாக ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் அதிக டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரின் விசார ணையில் தெரியவந்துள்ளது. இந்த டெண்டர் விவகாரம் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே, வாக்கி-டாக்கி வாங்கியதில் ரூ.88 கோடி முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், தொழில்நுட்ப கருவிகள் வாங்கி யதில் ரூ.350 கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.