பறிமுதல் செய்யப்பட்ட பணம் 
க்ரைம்

ஓசூர் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.3 லட்சம்: லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி

ஓசூர் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 3 லட்சத்து 8 ஆயிரத்து 70 ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேதாஜி சாலையில், ஓசூர் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உள்ளார். இந்த அலுவலகத்தில் உறுப்பினர் செயலாளராக, யோகராஜ் உள்ளார்.

இந்நிலையில், நேற்று (செப்.27) கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸார், புதுநகர் வளர்ச்சிக் குழுமம் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு கணக்கில் வராத 3 லட்சத்து 8 ஆயிரத்து 70 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து யோகராஜ் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT