பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

மேச்சேரியில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 6 பேர்கைது: துப்பாக்கிகளும் பறிமுதல்

வி.சீனிவாசன்

சேலம்

மேச்சேரியில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி சுற்றுவட்டார பகுதிகளான கீரைக்காரனூர், வெடிகரன் புதூர், சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளத் துப்பாக்கிகளை தயாரித்துப் பயன்படுத்தி வந்த 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் கள்ளத்துப்பாக்கி தயாரித்த காசி என்பவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், செல்வம், ஐயன்துறை, மணி, முத்துசாமி, வெங்கடேஷ் இவர்கள் 5 பேரும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மிருகங்களை வேட்டையாடுவதற்காகவும் பல்வேறு வனகுற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காகவும், சட்டவிரோதமாக கள்ளத் துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மேச்சேரி போலீஸாருக்கு புகார் வந்ததையடுத்து போலீஸார் 6 கள்ளத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், துப்பாக்கியை தயாரித்த காசி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு வன குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது போன்று இன்னும் ஏராளமான துப்பாக்கிகள் கள்ளத்தனமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் தொடர்ந்து மேச்சேரி போலீஸார் தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT